அமெரிக்காவின் ச தி! ஆ பத்தான கட்டத்தில் இலங்கை- வி டுக்கப்பட்டுள்ள எ ச்சரி க்கை

அமெரிக்காவின் சதி! கட்டத்தில் இலங்கை

அமெரிக்காவின் சோபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒவ்வொரு நாடும் ப யங் கரமான சவாலை எதிர்கொள்கின்றன, இது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ச தி நடவடிக்கை ஆகும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

சோபா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இந்தத் தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கை ஏற்கனவே அமெரிக்காவுடன் இரண்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக இலங்கையின் துறைமுகங்கள் விமான நிலையங்கள், எரிபொருள் மற்றும் தகவல்தொடர்பு போன்ற வசதிகளை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கின்றது.

குறிப்பாக, அமெரிக்க துருப்புக்கள் எந்த அறிவித்தாலும் இன்றி இலங்கைக்கு வருவதற்கும், அவர்களின் போ ர் விமானங்கள் மற்றும் பிற போர் உபகரணங்கள் மற்றும் இலங்கையின் கட்டுப்பாட்டில் இல்லாத அவர்களின் சொந்த தகவல் தொடர்பு அமைப்பு போன்ற அனைத்து சக்திகளையும் போரில் ஈடுபடுத்துவதற்கு சோபா ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

இந்த சூழ்நிலையில், சோபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒவ்வொரு நாடும் இந்த சவாலை எதிர்கொள்கின்றன, இது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ச தி நடவடிக்கை ஆகும். நாடுகளின் இறையாண்மையை இது பாதிக்கின்றது.

மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் யு த்த சூ ழ்நிலையைப் பார்க்கும்போது, இந்த யு த்தத்தில் அமெரிக்கா இலங்கையை ஒரு பங்காளியாக மாற்றுவதற்கான தெளிவான வாய்ப்பு உள்ளது. அது நிகழும் முன் தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு உண்மையான அ ச்சுறுத் தலாக 1995 இல் கையெழுத்திடப்பட்ட சோபா ஒப்பந்தம் 2007 இல் நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது கையெழுத்திடப்பட்டது, மற்றும் 2017இல் அக்ஸா ஒப்பந்தத்தின் நீட்டிப்பை உடனடியாக ரத்து செய்து நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வருமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

You might also like