இலங்கை மாணவர்களை வெளிநாட்டு அனுப்பும் நிறுவனங்களே அடுத்த இலக்கு

இலங்கை மாணவர்களை வெளிநாட்டு அனுப்பும் நிறுவனங்களே அடுத்த இலக்கு

யர்கல்விக்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை மாணவர்களை அனுப்பும் நிறுவனங்களை ஒழுங்குறு படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தகவல் திணைக்களத்தில் நேற்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இதை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்து 15 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றார்கள்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு குறித்த நிறுவனங்களினால் வழங்கப்படும் வாக்குறுதியின்படி வெளிநாடுகளில் கல்வி கற்க முடியாமல் போகின்றது.

இது தொடர்பில் தாம் பங்களாதேஷ் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நாட்டு பல்கலைக்கழகங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்ததாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like