அனைத்து பட்டதாரிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது கோட்டாபய அரசாங்கம்

அனைத்து பட்டதாரிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது கோட்டாபய அரசாங்கம்

அரசாங்கம் உறுதியளித்தபடி 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்படுமென கோட்டாபய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.

வேலையற்று இருக்கும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்தில் நியமனம் வழங்கப்படுமென தெரிவித்தார்.

மேலும் இந்த நியமனங்கள் வயதைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

You might also like