homepage side 2

கிளிநொச்சியில் திடீர் முற்றுகையில் குதித்த அதிகாரிகள்!

கிளிநொச்சியில் திடீர் முற்றுகையில் குதித்த அதிகாரிகள்!

கிளிநொச்சி – கரடியனாறு கோர மோட்டை பகுதியில் ச ட்டவிரோ தமாக மணல் அகழ்வு இடம்பெறும் பகுதி கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களால் முற்றுகையிடப்பட்டது.

இதன் போது மண் கொ ள்ளையர்கள் த ப்பித்துச் சென்ற நிலையில், மண் அ கழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் ச ட்டவி ரோத மண் அகழ்வு பி ரச்சினை பாரிய சவாலாக மாறியுள்ள நிலையில் அதனைத் த டுப்பதற்கு பொலிஸார் மற்றும் பொதுமக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் வான் நீர் பாய்ந்து ஓடும் கரடியனாறு கோர மோட்டை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்த ஆற்று படுகையில் ச ட்டவி ரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களால் பெரும் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் கரடியனாற்றினுள் மரங்கள் விழுந்து கி டப்பதால் இரணைமடு குளத்தில் வழிந்தோடும் நீர் தடைப்பட்டு கிராமங்களுக்குச் செல்லக் கூடிய நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாட்டை தடுக்கும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் ச ட்டவி ரோத ம ணல் அ கழ்வு இடம்பெறும் இடத்துக்கு இன்றைய தினம் நேரடியாக விஜயம் செய்திருந்தனர்.

இதனையடுத்து மணல் அ கழ்வில் ஈடுபட்டவர்கள் மண் அ கழ்வதற்கு பயன்படுத்திய பொருட்களை கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

உழவு இயந்திரத்தின் மூலம் மணல் குவிக்கும் சவல், மண்வெட்டி, இரும்பு கேபிள், உழவு இயந்திரத்தின் கலப்பை என பல பொருட்களை ச ட்டவி ரோத மணல் அ கழ்வில் ஈடுபட்டவர்கள் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தப் பொருட்களை கைப்பற்றிய கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், அவற்றை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like