அதிகாரிகளுக்கு வியப்பை ஏற்படுத்திய கோட்டாபயவின் முன்மாதிரியான செயல்பாடு!

அதிகாரிகளுக்கு வியப்பை ஏற்படுத்திய கோட்டாபயவின் முன்மாதிரியான செயல்பாடு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இம்மாத இறுதியில் சிங்கபூருக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்திய பரிசோதனைகள் சிலவற்றை முன்னெடுப்பதற்காகவே, அவர் அங்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அவரின் சிங்கப்பூர் சகல செலவுகளும் தன்னுடைய தனிப்பட்ட செலவிலேயே முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னர், ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்டோர், சிங்கபூருக்கு வைத்திய சிகிச்சைகளுக்காக சென்றுள்ளனர்.

எனினும் அவர்களின் சகல செலவுகளும், அரசாங்கத்தின் செலவீனத்தின் கீழே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தனது தனி்ப்பட்ட செலவிலேயே சிங்கபூருக்கு செல்லவுள்ளார்.

அத்துடன் அங்கு இடம்பெறும் சகல செலவுகளும் அவருடைய தனிப்பட்ட பணத்திலேயே செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு, ஏனைய அதிகாரிகளின் தலையில் கொட்டு வைத்தது போலவே இருப்பதாக,உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like