இவ் வருடம் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது தெரியுமா?

இவ் வருடம் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது தெரியுமா?

தமிழர் திருளாம் தைத்திருநாள். தமிழர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுன் வரவேற்கும் தைப்பொங்கல் திருநாள் நாளை கொண்டாப்படவுள்ளது.

பொங்கல் நன்னாளில் புதிய மண்பானையும் அடுப்புமாக வைத்து, பொங்கலிடுவதுதான் தமிழர்களின் பாரம்பரியம். அதற்காகவே புது அடுப்பு வாங்குவார்கள். புதிய மண்பானை வாங்குவார்கள். வெட்டவெளியில், வீட்டு வாசல், கொல்லைப்புறம், மொட்டை மாடி, என அடுப்பு வைத்து, மண்பானையில் பொங்கல் வைப்பார்கள்.

பொங்கல் படையலிட்டு சூரிய பகவானை வழிபடும் திருநாள் தைப்பொங்கல் திருநாள் ஆகும்.

அந்தவகையில் நாளை பொங்கல் வைக்கும் நேரம் காலை 7 முதல் 8 மணி வரை என சொல்லப்படுகின்றது . இந்த நேரம்தான் சூரிய ஹோரை. எனவே இந்த நேரத்தில் பொங்கலிடுவது சிறப்பு வாய்ந்தது என கூறப்படுகின்றது.அடுத்து, 8 முதல் 9 மணி வரை என்பது பூஜைக்கான காலம். இது, சுக்கிர ஹோரை. சுக்கிர ஹோரையில் பூஜை செய்தால், மகாலக்ஷ்மியின் பேரருளைப் பெறலாம். வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நாளை காலை 7 முதல் 9 மணிக்குள் பொங்கல் படையலிட்டு, சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்து, வீட்டு பூஜையறையிலும் நைவேத்தியங்கள் செய்து, வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.

காலை 7 முதல் 8 மணி என்பது சூரிய ஹோரை. 8 முதல் 9 மணி வரை சுக்கிர ஹோரை. ஒருவேளையில் இந்தத் தருணத்தில் பூஜிக்க இயலாதவர்கள், பொங்கல் வைக்க முடியாதவர்கள், மதியம் 12 முதல் 1 மணி வரை, பொங்கலிட்டு வழிபடலாம். இந்த நேரம் குரு ஹோரை எனப்படுகிறது.வீட்டில் கோலமிடுங்கள். பொங்கல் பானை வைக்கும் இடத்தில் கோலமிடுங்கள்.

பொங்கல் வைத்து,. பானைக்கு சந்தன குங்குமமிட்டு, மஞ்சள் கிழங்கு கொத்துகளை கட்டி, பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று கூவி, சூரியனைப் பிரார்த்தனை செய்வோம்.

இந்த தை பிறப்பானது , எல்லோருக்கும் நல்லருளை தருவதுடன், பொங்கும் பொங்கல், எல்லா ஐஸ்வர்யங்களையும் வழங்கி, உள்ளத்தையும் இல்லத்தையும் நிறைக்கட்டும்!

பொங்கும் மங்கலம் எல்லார் இல்லங்களிலும் தங்க இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

You might also like