கெ ட் ட வார்த்தை கத்துக்க டியூசன் போறாங்களாம் ஆலியா பட்..

கெ ட் ட வார்த்தை கத்துக்க டியூசன் போறாங்களாம் ஆலியா பட்..

பாலிவுட்டின் முன்னணி நடிகை கெ ட் ட வார்த்தை பேச கத்துகிட்டு வராங்க என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் மற்றும் கலங்க் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

இந்நிலையில், ஆலியா பட் நடித்து வரும் புதிய படத்திற்காக கெ ட் ட வார்த்தைகள் பேச பயிற்சி எடுத்து வருகிறாராம்.

ஜோயா அக்தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவான கல்லி பாய் திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் கடந்த ஆண்டு ஈட்டிய அந்த படம் ஆஸ்கர் ரேஸில் தோ ல் வியை சந்தித்து திரும்பியது.

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘Gangubai Kathiawadi’ படத்தில் லேடி கேங்ஸ்டராக ஆலியா பட் லீடு ரோலில் நடிக்க ரெடியாகி வருகிறார்.

மேலும், இந்த படத்தில் ஆலியா பட்டுக்கு எந்தவொரு கிளாமர் ஆடைகளோ, கிளாமர் காட்சிகளோ இல்லையாம். மும்பையை கலக்கிய ரியல் பெண் கேங்ஸ்டரை மையமாக வைத்து இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாரி இயக்கி வருகிறார்.

சஞ்சய் லீலா பன்சாலி படம் என்றாலே சர் ச் சை களுக்கு பஞ்சம் இருக்காது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான பத்மாவத் படத்திற்கு பட டைட்டிலில் இருந்து கிளைமேக்ஸ் காட்சி வரை பல பிரச்சனைகள் சர்ச்சைகள் வெடித்தன. எல்லாத்துக்கும் மேலாக படத்தில் நடித்த தீபிகா படுகோனேவின் தலைக்கும் விலை பேசப்பட்டது.

லேடி கேங்ஸ்டர் கங்குபாயாக ஆலியா பட் நடிக்கவுள்ள நிலையில், காத்தியாவாடி மொழியையும் கெ ட் ட வார்த்தைகளையும் ஆலியா பாட் கற்று வருகிறாராம். மேலும், பாடி லாங்குவேஜ் மற்றும் கங்குபாயாக மாற தேவைப்படும் பயிற்சிகளையும் ஆலியா மேற்கொண்டு வருகிறார்.

2019ம் ஆண்டு ஆலியாவுக்கு வெற்றியாண்டாக அமைந்தது. 2020ல் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பிரம்மாஸ்த்ரா மற்றும் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் சதக்-2 என மூன்று திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

கங்குபாய் காத்தியாவாடி படத்திற்கு முன்பாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சல்மான் கான் – ஆலியா பட் நடிப்பில் இன்ஷா அல்லாஹ் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பல காரணங்களுக்காக அந்த படம் அப்படியே டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.

You might also like