கண்டுபிடிப்புக்களின் நகரமாக மாறும் கிளிநொச்சி! மற்றுமொரு மாணவனின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்புக்களின் நகரமாக மாறும் கிளிநொச்சி! மற்றுமொரு மாணவனின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேரந்த ப.கிருசாந் என்னும் மாணவன் கழிவுப் பொருட்களைக் கொண்டு உந்துருளி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

வடிவமைத்த உந்துருளியை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டியுள்ளார்.

உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் கல்விகற்கும் மாணவனே குறித்த உந்துருளியை வடிவமைத்துள்ளார்.

பல திறமைகளுடன் இலைமறைகாயாக இருக்கும் எமது இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்.

அண்மையிலும்கூட கிளிநொச்சியை சேர்ந்த 13 வயது மாணவனின் கண்டுபிடிப்பான SOLAR POWERED THREE WHEELER உலகமே வியக்கும் அளவிற்கு அமைந்திருந்தது.

You might also like