வவுனியா கடற்படை முகாமில் அதிகாரி மரணம்!

வவுனியா, பூனாவ கடற்படை முகாம் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த அதிகாரி தனது படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே கீழேவிழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து 37 வயதான குறித்த அதிகாரியை வவுனியா வைத்தியசாலையில்அனுமதித்த பின்னரே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like