இளைஞரை தாக்கிய பொலிஸார் இருவர் பணி இடைநீக்கம்

தொடங்கொடை நகரில் மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்றவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடங்கொடை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றி வந்த சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் ஆணை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒருவரை பொலிஸார் அண்மையில் கடுமையாக தாக்கியிருந்தனர்.

பொலிஸார் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. தாக்க வேண்டாம் என கெஞ்சிய போதும் பொலிஸார் அந்த நபரை கொடூரமாக தாக்கினர்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் தற்போது களுத்துறை வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

களுத்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாச தலைமையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், இரண்டு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

You might also like