சற்று முன் வவுனியாவில் இரு மோட்டார் சைக்கில்கள் வி பத்து : மூவர் வைத்தியசாலையில்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கில் வி பத்து : மூவர் வைத்தியசாலையில்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (19.01.2020) காலை 11.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் வி பத்தில் சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த பல்சர் ரக மோட்டார் சைக்கில் வைரவப்புளியங்குளம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த பிலசர் ரக மோட்டார் சைக்கில் பல்சர் ரக மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு வி பத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பிலசர் ரக மோட்டார் சைக்கில் பயணித்த இரு பெண்களும் ஒர் சிறுவனும் கா யமடைந்தனர். கா யமடைந்தவர்கள் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like