முல்லைத்தீவில் எச்1என்1 வைரஸ் தொற்றினால் 63 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 63 பேர் எச்1என்1 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதிக்கு பின்னர் எச்1என்1 வைரஸ் தொற்று உள்ளாகியவர்கள் இனங்காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு சிகிச்சை பெற்றவர்களின் குருதி மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டபோது எச்1என்1 இருப்பது கண்டறியப்பட்டது.

பெப்ரவரி மாதம் எச்1என்1 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் 35பேரும், மார்ச் மாதம் 22 பேரும் காய்ச்சலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு எச்1என்1 தொற்றுக்கான சிகிச்சையே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குழந்தைகள் கர்ப்பிணிகள் முதியவர்களே இந்த நோயின் தாக்கத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிமனைத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like