கிளிநொச்சியில் 42ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஏன் தயங்குகிறது என கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (02.04.2017) 42ஆவது நாளாகவும் தீர்வு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த பிள்ளையை தொலைத்த தாயொருவர் கூறுகையில்,

காணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இருக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறியிருந்தது. இவ்வாறு இருக்கையில், அவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது.

எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஆனால் தற்போதைய ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை வெளியிடவே தயங்கி வருகிறார்.

இனி எவறேனும் எம்மிடம் வாக்கு கேட்டு வந்தால் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

You might also like