கிளிநொச்சியில் 202 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

ஐக்கிய இராட்சியத்தில் இருந்து இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புலம்பெயர்  உறவுகளின் நிதி அனுசரணையில்  கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட வறிய மற்றும் தாய் தந்தையரை  இழந்த நகர்ப்புற ,கிராமப்புற  மாணவர்கள் இருநூற்றிரண்டு    மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும்  நிகழ்வு இன்று  இரண்டாம்  திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு மணிக்கு கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அதிபர் ரவீந்திரன் தலைமையில்  நடைபெற்ற இன் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண  கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர குருகுலராஜா  அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான துவிச்சக்கர  வண்டிகளை  வழங்கிவைத்தார்

இன் நிகழ்வில் வடமாகாண  கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர குருகுலராஜா  வைத்தியக்கலாநிதி  சத்தியமூர்த்தி,ஓய்வுபெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் முருகவேள்,ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் தனரஜா  ,ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் பத்மநாதன்     அதிபர்கள் ஆசிரியர்கள்  பிருத்தானியாவில் இருந்து வருகைதந்த  கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்  பொருளாளர்  கணேசலிங்கம்   ஆகியோரும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் லண்டன் மற்றும் கிளிநொச்சிப் பிரதிநிதிகளும் மற்றும் பெற்றோர்கள்  மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

You might also like