அடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை!!

அடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை!!

எதிர்வரும் மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார உற்பத்திக்கு போதுமான நீர் மின் ஆலைகளுக்கு அருகில் இன்மை மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்காக மேலும் கடனுக்கு எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் கைவிட்டமையே இதற்கு காரணமாகும்.

நாட்டில் பொதுவாக 450 மெகாவோட் மின்சாரம் நாளாந்தம் தேவைப்பட்ட நிலையில் தற்போது 500 மெகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதற்கு கடுமையான வெப்பமான காலநிலையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

நாளாந்தம் மின்சார கோரிக்கை அதிகரித்தல் மற்றும் மின்சார தயாரிப்பிற்கு தடை ஏற்பட்டுள்ளமையினால் மின்சார தடை தவிர மாற்று நடவடிக்கை ஒன்று இல்லை என மின்சார பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய அடுத்த மாதம் நாளாந்தம் நாள் ஒன்றுக்கு பல மணித்தியாலங்கள் மின்சார தடை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like