வவுனியா பம்பைமடு குப்பைமேட்டு விவகாரம் : வீதியில் இறங்கிய முஸ்ஸிம் மக்கள்

வவுனியா பம்பைமடு குப்பைமேட்டு விவகாரம் : வீதியில் இறங்கிய முஸ்ஸிம் மக்கள்

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பா துகாப் பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அ கற்றும்படி கோரி, பிரதேச இ ஸ்லாமிய மக்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குற்பட்ட குப்பைகள், வைத்தியசாலை க ழிவுகள், பாவ னையற்ற பிளா ஸ்டிக் பொருட்கள், கா லாவதியான மரு ந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு லாரிகள்,உழவியந்திரங்கள் மூலம் கொண்டு வந்து பாது காப்பற்ற முறையில் வீ சுவதுடன், தீ மூ ட்டுவதால் வெளியாகும் கரு மையான பு கையினால், பல்வேறு சு வாச பிர ச்சினைகள் மற்றும் மழை காலங்களில் அதிகளவு து ர்நாற்றம் வீ சுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சும த்துகின்றனர்.

கடந்தவருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆர்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய கைவிடப்பட்டிருந்தது. தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆர்பாட்டம் இன்று மீண்டும்ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like