தை அமாவாசையில் இதை செய்தால் இவ்வளவு பலன்களா? தவறவிட்டு விடாதீர்கள்

தை அமாவாசையில்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதன் படி தைப்பொங்கலுடன் தை பிறந்துவிட்டது. தமிழர்கள் வாழ்வின் இது மிக முக்கியமான நாள்.

அடுத்ததாக மிக முக்கியமான நாளாக இம்மாதத்தில் கருதப்படுவது தை அமாவாசை. வான் மண்டத்தில் இருக்கும் சூரியன் ஜோதிட கணக்கின் படி மகரத்தில் உச்சம் பெரும் மாதம் இந்த தை மாதம். அதிலும் இந்த காலத்தில் வரும் அமாவாசை மிகுந்த சிறப்பு பெற்றது.

அமாவாசை என்பது இறந்து போன நம் குடும்ப முன்னோர்களை நினைத்து வழிபடுவதும், அவர்களுக்கு ஆறு, கடல் போன்ற நீர் நிலைகள் அருகே தர் ப்பணம் கொடுப்பது மிகுந்த முக்கியமானது.

சூரியன் பித்ரு காரகன் என்று சொல்லப்படுகிறார். வேதத்தின் நம்பிக்கையின் படி யாக அக்னியில் சமர்ப்பிக்கப்படும் விசயங்கள் உரியவரிடம் சென்று சேரும் என்பதே. அந்த பணிகளை அ க்னி பகவான் பார்த்துக்கொள்கிறார்.

மேலும் அவரின் வடிவாக இருக்கும் சூரியனின் சாட்சியாக நீர் நிலைகளில் பகல் வேளையில் திதி கொடுப்பதே.

நாளை வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி 24 ம் நாள் தை அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது.

ஏன் இதை நாம் செய்ய வேண்டும்?

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அவர்களின் ஆன்மாவும் சாந்தியடைந்து மகிழ்கிறது.

வீட்டில் குழந்தை செல்வம் வேண்டுமாலும், பிரச்சனைகள் நீங்கி அமைதி வேண்டுமானாலும், சுப நிகழ்ச்சிகளில் நடைபெற வேண்டுமானாலும், வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும் பித்ரு வழிபாடு என்று சொல்லக்கூடிய முன்னோர் வழிபாட்டை செய்யவேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

விளக்கு ஏற்றி இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படையலிட்டு வணங்கலாம்.
ஆதரவற்ற முதியவர்களுக்கு வேண்டிய உடை, உணவு, உபகரணங்களை வழங்கி மகிழ்விக்கலாம்.
குறிப்பிட்ட அமாவாசை நாளில் அசைவம் தவிர்க்கலாம்.
புனிதமான நீர்நிலைகளில் நீராடலாம் அல்லது அருகே இருக்கும் சிவ ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.

You might also like