இரவில் மூடப்படும் தருமபுரம் வைத்தியசாலை!பொதுமக்கள் குற்றச்சாட்டு

இரவில் மூடப்படும் தருமபுரம் வைத்தியசாலை!பொதுமக்கள் குற்றச்சாட்டு

தருமபுரம் வைத்தியசாலை இரவு வேளைகளில் உத்தியோகப்பற்றற்ற வகையில் மூடப்படுவதால் பல்வேறு அசௌ கரியங்களுக்கு முகங்கொடுப்பதாக பிரதேசப் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கிளிநொச்சியின் – கண்டாவளைப் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேசம் ஆகியவற்றினைச் சேர்ந்த மக்கள் இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

இரவு வேளைகளில் அவரச சிகி ச்சைகளுக்காகச் செல்லும் நோயாளர்கள் மறுநாள் காலை ஆறு மணிக்கு வருமாறும் அவசரம் எனில் நேரடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குச் செல்லுமாறும் பணிக்கப்படுகின்றனர்.

அதையும் மீறி தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்க கோரும் நோயாளிகள் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் வைத்தியர்களால் மறுநாள் காலையிலேயே பார்வையிடப்படுகின்றனர்.

வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தரும் நோயாளர்களை வைத்தியர்கள் சரியாக பார்வையிடுவதில்லை எனவும், நோயாளி நோயை கூறுவதற்கு முன்பாகவே வைத்தியர் மருந்துச்சிட்டையை வழங்குவதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இடம்பெயர்விற்கு முன்னரும், பின்னரும் ஒரு வைத்தியருடன் இயங்கிய காலப் பகுதிகளில் கூட இருபத்து நான்கு மணிநேரமும் வைத்தியரால் நோயா ளிகள் பார்வையிடப்பட்ட இந்த வைத்தியசாலையில் தற்போது இரண்டு வைத்தியர்கள் பணியாற்றும் நிலையில், கடந்த ஒரு வருடகாலமாகத் தமக்கு இவ்வாறு அ நீதி இ ழைக்கப்படுவது குறித்துப் பொதுமக்கள் க டும் விச னம் தெரித்துள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாத்தார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

குறித்து விடயம் தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாவும், இதனையடுத்து தான் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து உரிய மக்களின் குற்றசாட்டுகள் தொடர்பில் அவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும்,பொது மக்கள் இனி வழமைபோன்று வைத்தியசாலை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like