கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட எஸ்போஸின் படைப்புகள் மற்றும் அவர் பற்றிய நூல் வெளியீடு

படுகாலை செய்யப்பட்ட சந்திரபோஸ் சுதாகர் என்ற எஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அவரது படைப்புகள் பற்றியதும் அவர் பற்றியதுமான நூல் வெளியீடு இன்று (02.04.2017) கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்ற எழுத்தாளரும் அதிபருமான பெ. கணேசன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் முதல் பிரதியை யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டு வைக்க எஸ்போஸின் தாயார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஓய்வுப்பெற்ற கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் அவர்கள் நூலின் பிரதிகளை வெளியிட்டு வைத்தார்.

எஸ்போஸ் பற்றியும் அவரது படைப்புக்கள் மற்றும் அவரின் செயற்பாடுகள் பற்றியும் கவிஞர்களான பொன் காந்தன், அநாமிகன், தடே. கிஸ்காட், திருநகர் ஜெகா,நிரஞ்சலன்,ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார், ஆசிரியர் தயாளன் கிருஸாந்தன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

நூலினை கவிஞர் கருணாகரன், தயாளன்,சித்தாந்தன் தொகுதி வடலி வெளியீடாக வெளியிடப்பட்டிருந்தது.

You might also like