கிளிநொச்சி மாவட்ட செயலக புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு!

கிளிநொச்சி மாவட்ட செயலக புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கான புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த இருவரையும் வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய அரசாங்க அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கனகராஜா சிறிமோகனன் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

மீள்குடியேற்றம் முதல் 2015ம் ஆண்டு வரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக செயற்பட்ட இவர் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த நிலையில் மீண்டும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த எஸ். சத்தியசீலன் திரைசேரிக்கு மாற்றம் பெற்று செல்லும் நிலையில், குறித்த வெற்றிடத்திற்காக வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும், தேசிய அருங்கலைகள் பேரவையின் வடமாகாண ஒருங்கிணைப்பு உத்தியோகத்தராகவும் செயற்பட்ட கனகராஜா சிறிமோகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக செயற்பட்ட எஸ்.சத்தியசீலன் நாளை திரைச்சேரியில் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

You might also like