சிறப்புற இடம்பெற்ற பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் விழா 2020

சிறப்புற இடம்பெற்ற பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் விழா 2020

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பனிக்கன்குளம் கலைமகள் முன்பள்ளி ஆகியவற்றின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழா 30 .01. 2020 அன்று மாலை பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றது

மாலை 1.30 மணி அளவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது அலைமகள் மலைமகள் என இரண்டு இல்லங் களுக்கு இடையில் போட்டிகள் இடம்பெற்று 164 புள்ளிகளைப் பெற்று மலைமகள் இல்லம் இரண்டாமிடத்தையும் 169 புள்ளிகளைப் பெற்று அலைமகள் இல்லம் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது

அத்தோடு கலைமகள் முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் மாற்றுத்திறனாளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் என்பன இடம்பெற்று முன்பள்ளி சிறார்கள் பாடசாலை மாணவர்கள் அனைவருக்குமான பரிசில்கள் வெற்றி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது

அதைத்தொடர்ந்து சிறந்த விளையாட்டு வீரர்களாக தெரிவு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து இல்லங்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் பாடசாலை மற்றும் கிராமத்திற்கான பல்வேறு உதவிகளை வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செல்லையா பிரேமகாந் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ. சந்திரரூபன் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது

பாடசாலை முதல்வர் திரு தா.தயாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செல்லையா பிரேமகாந் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ. சந்திரரூபன் அவர்களும் துணுக்காய் கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் திருமதி ஜெ.பாலச்சந்திரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக ஒட்டுசுட்டான் கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி ச.சந்திரகுமார் அவர்களும் பனிக்கன்குளம் கிராம அலுவலர் திரு செ.செந்தில்நாதன் அவர்களும் அயல் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை பெற்றோர் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

You might also like