கிளிநொச்சி முரசுமோட்டையில் அவமானப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்

நேற்று (01.04.2017) கிளிநொச்சி முரசுமோட்டையில் அழையா விருந்தாளியாக பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவமானத்துடன் வீடு திரும்பினார். கிளிநொச்சி மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
கிளிநொச்சி முரசுமோட்டை றோ.க.தமிழ்கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக மத்திய கல்வி அமைச்சர் ராதாகிருஸ்ணனும்,சிறப்பு விருந்தினராக சரவணபவனும் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்வை ஏற்பாடு செய்த பாடசாலை நிர்வாகம் சிறிதரனுக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை. அழைப்பு விடுக்கமால் விட்டும் சிறிதரன் அழையா விருந்தாளியாக நிகழ்வுக்குள் நுழைந்தது ஏற்பாட்டாளர்கள் முகம் சுளித்துக்கொண்டதுடன் ஒரு சம்பிதாயத்திற்குக்கூட வந்தவரை வரவேற்கவில்லை. இந்த நிலையில் தனக்கு மரியாதை கிடைக்காமல் விட்டதை எண்ணிக்கொண்டு நிகழ்வின் அரைவாசியிலே புறப்பட்டார் சிறிதரன்.
சிறிதரன் சென்றதும் சரவணபவன் உரையாறுகையில் நாங்கள் கிளிநொச்சியில் வந்து வேலை செய்ய தயாராக இருக்கிறோம் ஆனால் இங்கு இருக்கின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நாம் இங்கு வருவதை விரும்புகிறார் இல்லை அதனாலேயே என்போன்ற பலர் இங்கு வர தயங்குகின்றனர். இவ்வாறான காரணங்களாலேயே போரால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு எங்களால் உதவமுடியவில்லை என்றார்.
– Siva Karan-