புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த விழா இன்று விளக்கு வைத்தலுடன் ஆரம்பமாகி பாரம்பாரிய முறைப்படி தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திப ண்டமரவடியில் இருந்து படைப்பண்டம் எடுத்து வருவதற்காக மாட்டுவண்டில்கள் புறப்பட்டுள்ளன.

அத்துடன், நிகழ்விற்கு தேவையான ஏற்பாடுக்ளை தர்மகர்த்தாக்களும் பரிபாலசபையினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினம் பிற்பகல் 2.00 மணியளவில் விளக்கு வைத்தலுடன் ஆரம்பமாகி பாரம்பாரிய முறைப்படி தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திபண்டமரவடியில் இருந்து படைப்பண்டம் எடுத்து செல்லப்பட்டு எதிர்வரும் 9ம் திகதி இரவு பொங்கல் விழா இடம்பெரும்.

மேலும், வழமைபோன்று ஆலய பொங்கல் விழாவிற்வான போக்குவரத்து ஒழுங்குகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You might also like