இன்று முதல் பல இலட்சக்கணக்கான கைபேசிகளில் வாட்ஸ்ஆப் இயங்காது..!

இன்று முதல் பல இலட்சக்கணக்கான கைபேசிகளில் வாட்ஸ்ஆப் இயங்காது..!

இன்று பல இலட்சக்கணக்கான கைபேசிகளில் மெசேஜிங் சேவையை வழங்கிவரும் வாட்ஸ்ஆப் இயங்காது என தெரியவந்துள்ளது.

முகப்புத்தக நிறுவனத்துக்கு சொந்தமான செயலிகள் காலாவதியான இயங்குதளங்களில் மட்டுமே இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன் கருவிகளில் இனி செயல்படாது.வாட்ஸ்ஆப் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கை அவசியம் தேவை என்று வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

மேலும், ஆண்ட்ராய்ட் திறன்பேசியில் 2.3.7 பதிப்பு அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும், ஆப்பிள் ஐபோனில் ஐஓஎஸ் 8 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும் வாட்ஸ்ஆப் செயலி இன்றுமுதல் இயங்காது.

பரவலான பயன்பாட்டில் இல்லாத இயங்குதளங்களுக்கு வழங்கி வந்த சேவையை வாட்ஸ்ஆப் நிறுவனம் கைவிட்டுள்ளது. இந்இயங்குதளங்கள் பொதுவாக எந்தவொரு புதிய கருவியில் நிறுவவோ அல்லது அப்டேட்டோ செய்யப்படுவதோ கிடையாது.

ஒருவேளை வாட்ஸ்ஆப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் தங்களுடைய கைபேசிகளின் இயங்குதளங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

You might also like