வவுனியாவில் 24 வயதுடைய யுவதிக்கு கொ ரோனா வை ரஸ்? யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

வவுனியாவில் 24 வயதுடைய யுவதிக்கு கொ ரோனா வை ரஸ்? யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

கொ ரோனா வை ரஸ் என சந்தேகிக்கப்படும் 24வயதுடைய வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் இன்று (05.02.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சமுதாய வைத்திய நிபுனர் வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவை சேர்ந்த 24வயதுடைய குறித்த யுவதி சீனா நாட்டிக்கு கல்விக்காக சென்ற நிலையில் கடந்த 28ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

குறித்த யுவதிக்கு மெல்லிய கா ய்ச்சல் மற்றும் த டிமல் இருந்தமையினால் குறித்த யுவதி சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெ ளிநோ யாளர் பிரிவிற்கு இன்று (05.02.2020) காலை சென்று அவரது விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி கொரோனா வைரஸின் மையப்பு ள்ளியான சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெகு தொலைவில் தான் வசித்துள்ளார். எனினும் மெல்லிய கா ய்ச்சல் மற்றும் த டிமல் போன்ற விடயங்கள் கோ ரோனா வை ரஸின் அ றிகுறி களாக இருக்கலாம் என்ற அ ச்சத்தில் அவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட விசேட விடுதியில் தங்கப்பட்டு,

வடமாகாணத்தில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றுக்கு சி கிச்சை அளிப்பதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியசாலையான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாலை 3.00 மணியளவில் நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த யுவதிக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு பின்னரே குறித்த யுவதி கோ ரோனா வை ரஸ் தொ ற்றுக்கு உள்ளாகியுள்ளரா? என்ற விடயத்தினை உறுதிப்படுத்த முடியுமென மேலும் தெரிவித்தார்.

You might also like