இன்றைய ராசிபலன் 06.02.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 06.02.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் வாய்ப்புகள் இல்லம் நாடி வரும்.

மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் காண்பீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சக பணியாளர்களிடத்தில் பாராட்டு பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். கூட்டு தொழில் புரிபவர்களுக்கு ஏற்றகரமான நாளாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு நல்ல லாபம் கிட்டும்.

வெளிநாடுகளில் வசித்துக் கொண்டு இருப்பவர்கள் புதிய சாதனைகளை புரிவீர்கள். நண்பர்களினால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஹயக்ரீவரை வணங்கி வாருங்கள் நன்மை உண்டாகும்.

மிதுனம்:

மிதுன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலையை காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு சில குழப்பங்கள் ஏற்படக் கூடும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தாமதம் ஏற்படும்.

மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அவர்களை முன்னேற்ற பாதையில் நடத்திச் செல்வதற்கான வழிகளை நீங்கள் தான் கற்றுத்தர வேண்டும். பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வது நல்லது. பெற்றோர்களின் உடல்நலனில் அக்கறை தேவை. கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட முழு மூச்சாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களின் நகைச்சுவை உணர்வால் பலரது நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் விருத்தி உண்டாகும்.

புதிய நண்பர்கள் மூலம் சில வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மாணவர்களின் கல்வியில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். உயர்கல்வி படிப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு காரணமாக சில உபாதைகள் ஏற்படக்கூடும். எனவே தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் வெற்றி பெறலாம்.

மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களின் ஒத்துழைப்பால் சில புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியே ஆதாயம் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் பிரிவினையை உண்டாக்கக்கூடும் எனவே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சலை சந்திக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் திடீர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

பெண்களுக்கு மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டிய ஒரு நாளாக இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலை காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை உண்டாகும். குடும்பத்தில் வெளி நபர்களால் சில குழப்பங்கள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும்.

கல்வியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மூட்டு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நண்பர்களினால் ஆதாயம் உண்டு. சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விரயங்களை சந்திக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் இருப்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரம் விருத்தி அடைய சில முயற்சிகளை எடுப்பீர்கள். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையினால் நன்மை உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையற்ற விரயங்கள் ஏற்படக்கூடும். எந்த ஒரு முடிவையும் இன்றைய நாளில் எடுக்காமல் இருப்பது நல்லது. ஓரிரு நாள் கழித்து முடிவெடுத்துக் கொள்ளலாம். கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு திடீர் தனவரவு உண்டாகி உற்சாகப்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல சூழ்நிலை காணப்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

வெளிநாடு வேலை வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். குழந்தை பேற்றை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலைவாய்ப்பிற்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிட்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பயணங்களால் ஆதாயம் உண்டு.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் நல்ல சூழ்நிலையில் இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு விருத்தி உண்டாகும். சுயதொழில் புரியும் பெண்கள் லாபத்தைக் காண்பீர்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகும்.

வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். சகோதர சகோதரிகளின் வழியே தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இறை வழிபாடுகளின் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக சில உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். புதிய வாய்ப்புகளை தேடுவதன் மூலம் வெற்றி காணலாம். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

புதிய தொழில்நுட்பங்களை வாங்கி மகிழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புணர்வு அதிகமாக காணப்படும். உத்தியோகத்தில் தங்களின் கடமை என்னவென்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்கள் தங்களின் கல்வியில் கூடுதல் ஆர்வம் காட்டுவீர்கள்.

சரஸ்வதி தேவியை வழிபடுவதன் மூலம் நல்ல பலன் காணலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். குடும்ப நபர்கள் இடையே அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து இன்முகத்துடன் இருப்பது இன்றைய நாள் நல்ல நாளாக மாற்றி தரும். அம்பிகையை வழிபடுவது சிறப்பான பலன் தரும்

You might also like