பிறந்த ஆறு மணிநேரத்தில் குழந்தையை துடிதுடிக்க புதைத்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்

ஒடிசாவில் பிறந்து ஆறு மணி நேரங்களே ஆன குழந்தையை, அவரது தந்தை உயிரோடு புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் ஜெய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்சந்திரா பசண்ட்டியா(35). இவரது மனைவிக்கு கடந்த சனிக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்து ஆறு மணி நேரமே ஆன குழந்தையை அவர் அருகில் உள்ள இடத்தில் துடி துடிக்க உயிரோடு புதைத்துள்ளார்.

புதைக்கப்பட்ட குழந்தையின் கால்களை கண்ட அங்கிருந்த கிராம மக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை புதைத்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரமேஷ் சந்திரா ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நான்கு குழந்தைகள்.

அதில் தனக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள், மூன்றாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் புதைத்து விட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

You might also like