கால்வாயை தூர்வாரும் போது கொத்து கொத்தாக கிடந்த சடலங்கள்: பொலிசார் அதிர்ச்சி

இந்தியாவில் கால்வாயை தூற்வாரும் போது கொத்து கொத்துகாக சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பக்ரா நங்கல் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயை ராட்சஷ இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது.

அப்போது அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் 12 சடலங்கள் கால்வாயிலிருந்து கண்டெடுக்கபட்டன.

இன்னும் சடலங்கள் கைபற்றப்படலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து அங்கிருக்கும் ஒருவர் கூறுகையில், இதுவரை கண்டெடுக்கபட்டுள்ள சடலங்கள் இங்கு வந்து 1-10 மாதங்கள் ஆகியிருக்கும்.

12 பேரில் ஒருவர் பெயர் மட்டும் satnam singh என்றும் அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த சடலங்கள் எல்லாம் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் பஞ்சாப்பிலிருந்து தண்ணீரில் அடித்து வந்துள்ளது என கூறியுள்ளார்.

பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like