கிளிநொச்சியில் இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேர் கைது

கிளிநொச்சியில் இராணுவ உயரதிகாரி

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காட்டு பகுதியில் இன்று அதிகாலை இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் பு தையல் தோ ண்ட மு ற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இ ரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ஒரு இராணுவ உயரதிகாரி, நான்கு இராணுவத்தினர் உள்ளிட்ட 21 பேரே கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பு தையல் தோ ண்டுவதற்கு பயன்படுத்தும் பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்கள் பயணித்த மூன்று வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

You might also like