மணல் விலையில் வருகிறது மாற்றம்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

மணல் விலையில் வருகிறது மாற்றம்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

மணல் விலையில் ஏற்படும் விலை உயர்வானது அபிவிருத்திப் பணிகளுக்கும், மக்களின் தேவைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இதில் கட்டுப்பாட்டினை கொண்டுவர வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தற்போது 15 ஆயிரம் தொடக்கம் 16 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படும் மணல் விலையானது எதிர்வரும் காலங்களில் 12 ஆயிரமாக குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நுகர்வோருக்கு மேற்படி குறைந்த விலையில் மணலை விநியோகம் செய்வதற்காக கொழும்பின் 10 இடங்களில் மணல் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக 5 பிரதான நகரங்களில் மணல் விற்பனை நிலையங்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு, அரசாங்கத்தின் ஊடாக மணல் அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like