ரயில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்! வருகிறது புதிய நடைமுறை

ரயில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்! வருகிறது புதிய நடைமுறை

ரயில் டிக்கட்டிற்காக முற்கொடுப்பனவு மற்றும் ஈ-டிக்கட் முறையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

ரயில் டிக்கட் வழங்கும் போது ஏற்படும் மு றைக்கே டுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இந்த முற்கொடுப்பனவு முறை, ஸ்மார்ட் அட்டை முறையை செயற்படுத்தப்படும். அதன் ஊடாக ஒரு வருடத்திற்கு பயணி ஒருவர் அந்த அட்டை மூலம் டிக்கட் பெற முடியும்.

அத்துடன் இணையம் ஊடாக செயற்படுத்தப்படும் ஈ-டிக்கட் முறை மூலம் எந்தவொரு இடை நபரும் இன்றி உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் டிக்கட்களை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

சில நபர்கள் அதிக பணம் செலுத்தி டிக்கட் பெற வேண்டும் எனவும், இந்நிலைமையில் வெளிநாட்டு பயணிகளை இலக்கு வைத்து மோ சடிகள் இடம்பெறுகின்றன.

இந்த மோ சடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like