73 வயது மூதாட்டியின் அட்டகாசம்! சுற்றி வளைத்த பொலிஸார்
73 வயதான மூதாட்டியினால் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட மையமொன்று. பண்டாரகம பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம விதாகம பிரதேசத்தில் நீண்ட காலமாக இந்த சூதாட்ட மையம் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்துள்ளது.
73 வயதான மூதாட்டி தனது வீட்டிலேயே இந்த சூதாட்ட மையத்தை நடத்தி வந்துள்ளார்.
சூதாட்ட மையத்தை நடத்தியமை தொடர்பில் ஏற்கனவே இந்த மூதாட்டிக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் மூதாட்டியுடன், சூதாடிக் கொண்டிருந்த மேலும் சில பெண்களும் கைது செய்பய்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 30 முதல் 40 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.