கோட்டாபய விடுத்த பணிப்புரை! 20 ஆயிரம் அரச ஊழியர்கள் முன்வைத்த முறைப்பாடுகள்

கோட்டாபய விடுத்த பணிப்புரை!

அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக ப ழிவாங் கப்பட்டவ ர்களிடமிருந்து 20 ஆயிரம் மு றைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இதுபற்றி வி சாரிக்கும் குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை இது தொடர்பான மு றைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

கொழும்பு 02, பார்க் வீதியில் அமைந்துள்ள, இலக்கம் 23, பார்க்லன்ட் கட்டடத்தின் 19ஆவது மாடியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு தபால் மூலம் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும்.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை அரசியல் ரீ தியாக ப ழிவாங்க ப்பட்டோருக்கு, சமகால அரசாங்கம் நிவாரணம் வழங்கவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய அரசியல் ரீ தியாக பா திக்கப்பட்டவர்கள் தொடர்பிலான கண்டறியும் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like