ஸ்ரீலங்காவிற்குள் ரஷ்யாவின் பெரும் திட்டம்!

ஸ்ரீலங்காவிற்குள் ரஷ்யாவின்

இலங்கையில் அணுசக்தி மின் உற் பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

இலங்கையில் அணு மின் உற் பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைக் கருத்திற்கொண்டே ரஷ்யா இவ்வாறு ஆராய்ந்து வருகிறது.

இலங்கை அரசாங்கம் மா சற்ற எ ரிசக்திக்கு ஆத ரவளிப்பதால் நீண்டகால நவடிக்கை ஊடாகவே இவ்வாறான திட்டம் நடைமுறைப்படுத்த சாத்தியமாகும். இலங்கையில் அணுசக்தி மின் உற் பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரு அரசாங்களுக்கும் இடையிலான ஒற்றுமையையும், பொருளாதார வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு இலங்கையில் அணுமின் உற் பத்தி நிலையத்தை உருவாக்குதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like