வடமாகாணத்தில் கடந்த 3 வருடங்களில் 3 கோடியே 66 லட்சத்து 30340 ரூபாய் மக்களின் வாிப்பணத்தில் 349 அரச ஊழியா்கள் வெளிநாட்டுக்கு பயணம்..!

கடந்த 3 வருடங்களில் மக்களின் வாிப்பணத்தில்

கடந்த 3 வருடங்களில் அரச உத்தியோகஸ்த்தா்கள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக மட்டும் 3 கோடியே 66 லட்சத்து 30 ஆயிரத்து 339 ரூபாய் 25 சதம் செலவிடப்பட்டிருப்பதாக வடமாகா ண பிரதம செயலாளா் அலுவலகம் அறிவித்திருக்கின்றது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் மாகாண சபையின் கீழ் உள்ள நிர்வாகங்களில் இருந்து உத்தியோக பூர்வமாக

பயணித்தவர்களிற்கே இந்த நிதி வழங்கப்பட்டதாகவும் பணி நிமித்தம் பயணிக்கும் உத்தியோகத்தர்க ளிற்கு நாள் ஒன்றிற்கு 40 டொலர் விகிதம் வழங்கும் வகையிலேயே இக் கொடுப்பனவு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் பிரகாரம் 2017ஆம் ஆண்டு 165 பேரும் ,

2018ஆம் ஆண்டில் 119 பேரும் பயணித்துள்ளதோடு 2019ஆம் ஆண்டில் 65 உத்தியோகத்தர்களு மாகவே உத்தியோக பூர்வமாக 349 உத்தியோகத்தர்கள் பயணித்துள்ளனர்.இவ்வாறு பயணித்த குறித்த 349 உத்துயோகத்தர்களில் திணைக்கள ரீதியில் ஆளுநரின் செயலகம் ஐவர் ,

பிரதம செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் 32 பேரும் , உள்ளூராட்சி அமைச்சிற்கு உட்பட்ட உத்தியோகத்தர்கள் 51 பேரும் , கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள் 86 பேரும் , சுகாதார அமைச்சிற்கு உட்பட்டோர் 111 பேரும் , விவசாய அமைச்சிற்கு உட்பட்ட

உத்தியோகத்தர்கள் 39 பேரும் , சிறுவர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர்கள் 23 பேரும் பயணித்துள்ளதோடு மாகாண சபைச் செயலக உத்தியோகத்தர்கள் இருவருமாகவே மொத்தம் 349 உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர். இதேநேரம் தனிப்பட்ட பயணம்

மேற்கொள்பவர்களிற்கு 14 நாட்கள் மட்டும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அனுமதிக்கப்படுகின்றது. அந்த வகையில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட 2 ஆயிரத்து 420 பேர் தனிப்பட்ட பயணமாக வெளிநாடுகளிற்கு சென்றுள்ளனர். இவற்றின் அடிப்படையில்

மொத்தமாக 2 ஆயி்த்து 769 பேர் வெளிநாட்டிற்கு பயணித்துள்ளதோடு இதில் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டவர்களிற்கு 14 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் பணி விடுமுறையில் சென்றவர்களிற்காக 3 கோடியே 66 லட்சத்து 30 ஆயி்த்து 339 ரூபா 25 சதம்

வடக்கு மாகாண சபையினால் செலுத்தப்பட்டுள்ளது.

You might also like