அராயகம் செய்யும் கரைச்சி பிரதேச சபை செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய் : கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 03-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணி பகஸ்கரிப்வில் ஈடுப்பட்டுள்ளனர்.

செயலாளர் சாதி பெயர்களை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளை மூலம் அவமானம் படுத்தி வருவாதகவும், தொடர்ந்தும் பழிவாங்கம் நோக்கோடு நடந்துகொள்வதாகவும், இடைநிறுத்தப்பட்ட பணியாளர்களை உடன் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும். சாதியை சொல்லி பேசிய செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன் வைத்து திங்கள் காலை முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதனிடம் வினவிய போது

இரண்டு வேலை வெளிக்கள தொழிலாளிகள் தங்களின் கடமைபட்டியலுக்கு அமைவாக பணிகளை மேற்கொள்ளாது அலுவலகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி வந்ததன் காரணமாக அவர்கள் இருவரும் தற்காலிகமாக விசாரணையின் பொருட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும்தான் ஏனையவர்களையும் தூன்டிவிட்டு இவ்வாறான ஒரு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் தங்களது கடமைப்பட்டியலுக்கு அமைவாக பணிகளை செய்ய முன்வந்தால் அவர்களுக்கு உடனடியாக மீண்டும் பணிக்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனத்தெரிவித்த செயலாளர்

தான் தன்னுடைய வாழ்நாளில் எச் சந்தர்ப்பத்திலும் சாதியின் பெயர்களை உச்சரித்தது கிடையர்து அத்தோடு தூசன வார்த்தைகளையும் பேசியது கிடையர்து இது பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக கூறும் காரணங்கள் எனவும் தெரிவித்தார்

You might also like