வவுனியாவில் காதலர் தினத்தினை முன்னிட்டு நிலாவின் பாடல் வெளியீடு

வவுனியாவில் காதலர் தினத்தினை முன்னிட்டு நிலாவின் பாடல் வெளியீடு

ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலக எங்கிலும் காதலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன் நிலா என்பவர் பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த பாடல் வெளியீடு செய்யும் நிகழ்வு வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள டியா கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று (14.02.2020) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த பாடலின் இறுவட்டினை பாடல் ஆசிரியர் நிலா வெளியிட்டு வைத்தார்.

குறித்த பாடல் நிலா மற்றும் நிரோசன் ஆகியோரின் குரலில் பிரதீபனின் காணோளி உருவாக்கத்தில் கார்த்திக் எடிட்டிங் இல் தயாரிக்கப்பட்டுள்ளது. முற்றும் முழுதாக கையடக்க தொலைபேசி குறித்த பாடலுக்கான காணோளி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like