யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

யாழ்ப்பணம் சா்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கான விமான பயணத்துக்காக அறவிடப்படும் வரிக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய வரிக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகாாிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கான விமானப் பயணத்திற்காக பயணிகளிடம் அதிகளவு வரி அறவிடுவதாக துறைசார் அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்குப் பயணங்களை மேற்கொள்வோரிடம் விமான நிலைய வரியாக ஆறாயிரம் ரூபா அறவிடப்படுகிறது. எனினும் யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிராயிரம் ரூபா அறவிடப்படுகிறது.

இந்த செயற்பாடானது வடபகுதி மக்களுக்கு இழைக்கும் அநீதியானது என, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இணைவாக உள்ளக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், விமான பயண வரி தொகையை குறைக்கவும் அமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

You might also like