பிரித்தானியாவில் 234 விமான சேவைகள் திடீர் நிறுத்தம் : இராணுவத்தினர் களத்தில்!!

பிரித்தானியாவில் 2..

பிரித்தானியாயின் பல பிரதேசங்களை தற்பொழுது கடுமையாகத் தாக்கிக்கொண்டிருக்கும் டெனிஸ் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வீதிப் போக்குவரத்துக்கள், மின் வினியோகம், விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. British Airways மற்றும் Easy Jet விமான நிறுவனங்கள் தமது நூற்றுக்கணக்கான சேவைகளை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

குறிப்பாக Easy Jet விமான நிறுவனம் 234 விமான சேவைகளை இன்றைய தினம் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பல பிரதேசங்கள் மோசமான வெள்ள அபாயத்திற்கு உட்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Calderdale, West Yorkshire போன்ற பிராந்தியங்களில் மிக மோசமான வெள்ளப்பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினால் அங்கு ராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த புயல் தாக்கம் இன்றும் இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

You might also like