வவுனியா- மன்னார் வீதியோரத்தில் இருந்து முச்சக்கர வண்டி மீட்பு! என்ன நடந்தது என பொலிசார் விசாரணை..?

வவுனியா, பம்பைமடு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளதன நிலையில் வீதியோரத்தில் இருந்து நெளுக்குளம் பொலிசாரால் இன்று (03.04.2017) காலை மீட்கப்பட்டுள்ளது.

எனினும், இவ்விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான எதுவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. அத்துடன் இவ்விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி வீதியில் 10 மீற்றர் தூரத்திற்கு தள்ளிச்செல்லப்பட்டுள்ளது. குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்த நிலையில் வீதியோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது

இவ்விபத்து எவ்வாறு நிகழ்ந்தது, இது யாருடைய முச்சக்கர வண்டி என்பது தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like