மாடிகளை விட்டுவிட்டு குடிசைகளை இடிக்க முயற்சிக்கும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை

கரைச்சி பிரதேச சபை

1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற செ ல் தா க்குதலில் ஒரு காலை இ ழந்து, தற்போது கணவனால் கைவிடப்பட்டு, ஒரு காலுடன் ஆடைத் தொழிற்சாலையில் நின்ற நிலையில் வேலை செய்து, ஐந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணின் தற்காலிக வீடு கரைச்சி பிரதேச சபையில் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து அதனை இ டித்த ழிக்க போவதாக கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.

கடந்த வருடம் தீ யினால் எரிந்த தனது வீட்டை ஊரவர்களின் உதவியுடன் ஆறு தூண்களை கொண்டு சீமெந்து கற்களை கொண்டு தற்காலிக வீடு ஒன்றை அமைத்துள்ளார். அதனையே இடி த்தழிக்க போவதாக கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன் வீதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு அருகில் குறித்த பெண்ணின் வீடு அமைந்துள்ளது.

கரைச்சி பிரதேச சபையினரே!

உங்கள் கண்ணுக்கு முன்னே கிளிநொச்சி நகரில் பல மாடிகள் ச ட்டவி ரோதமாக அமைக்கப்பட்டுள்ளது. விண்ணை தொடும் மாடிகள், மாளிகைகளை விட்டுவிட்டு மண்ணை தொடும் குடிசைகளை இடிக்கும் உள் நோக்கம் என்ன?

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 90 வீதத்திற்கு மேற்பட்ட வீட்டுத்திட்டங்களை பெற்ற மக்கள் பிரதேச சபையில் அனுமதி பெறாமலே நிரந்தர வீடுகளை அமைத்துள்ளனர். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஒரு கால் இல்லாத பெண் தலைமைத்துவ குடும்ப பெண் அமைத்துள்ள தற்காலிக வீட்டை இ டித்தழிக்க முற்படுவதன் நோக்கம் என்ன?

குறித்த காணி ஒரு தனியார் காணியாகும் அதனை கரைச்சி பிரதேச சபையின் ஆதனம் என்று எழுதுவதன் உள் நோக்கம் என்ன?

சட்டத்தை இவ்வாறான ஏழைகள் மீது அவசரமாக நடைமுறைப்படுத்தும் நோக்கம் என்ன? சட்டம் அனைவருக்கும் சமம்? ஆனால் உங்களது சட்டம்?

You might also like