வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் பல மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாம்..?  நெற்செய்கையிலா..கோரையிலா..?

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் பல மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாம்..?  நெற்செய்கையிலா..கோரையிலா..?

வட மாகாணத்திற்கே விதை இனங்களை உற்பத்தி செய்து விவசாய மக்களுக்கு விநியோகிக்கும் பாரிய சேவையினை மேற்கொள்ள வேண்டிய வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் இந்த வருட பெரும்போக நெற் செய்கைக்கு பதிலாக சந்தனகோரை செய்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோ? என எண்னும் அளவிற்கு பண்ணையின் வயல் நிலம் சந்தனக்கோரைகள் நிறைந்து காட்சியளிக்கின்றது.

முன்னாள் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் ஒமந்தை அலைகல்லுப்போட்ட குளத்தின் கீழ் விவசாயிகளின் வயலில் கடந்த 06.10.2019 அன்று ‘விதைப்பு விழா’ எனும் தொனிப்பொருளின் கீழ் பெரும்போகத்தின் ஆரம்ப மழை நீரை பயன்படுத்தி விதைப்பினை மேற்கொண்டு மழை நீரை சேகரித்து குளங்களில் நீர் தேக்கி நீர்கிடைப்பனவை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 10ஏக்கர் அளவில் விதைப்பினை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நீரின் முக்கியத்துவத்தினை விளக்கி வைத்தார்.

எனினும் அரச விதை உற்பத்தி பண்ணையின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இம்முறை பண்ணையானது களைகளினால் சூழ்ந்து காட்சியளிக்கின்றது. களைகளை பயிரிட்டு இப் பண்ணை அதிக வருமானம் ஈட்டுகின்றதோ என பலரும் வியக்கின்றனர்.

பருவத்தில் பயிர் செய்’ என நம் முன்னோர்களின் கருத்து பொய்யாகிவிடும் நிலையை இவ் அரச விதை உற்பத்திப் பண்ணை (கடந்த 2019 நவம்பர் மாத பின் பகுதியிலிருந்து டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் விதைக்கப்பட்டது) நிறைவேற்றியுள்ளது.

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணைக்கு முன்பாக காணப்படும் விவசாயிகளின் வயற்காணிகளில் அறுவடை முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில் தற்போது பண்ணையின் வயல்கள் மட்டம் வெ டிக்கும் பருவத்திலும், குடலைப் பருவத்திலும், பயிர் எ ரிந்த நிலையிலும் காட்சியளிப்பது மன வே தனையளிக்கும் விடயமாக அமைந்துள்ளது.

பண்ணையின் இவ் அ சமந்த போக்கினால் பெரும்போக அறுவடை முடிந்த விவசாயிகளின் வயலில் உள்ள நோ ய்பீடைகள் , காவிகள் இவ் அரச விதை உற்பத்தி பண்ணையில் உள்ள வயல்களில் இடைக்காலங்களில் பெருகி மீண்டும் சிறுபோக செய்கையை விவசாயிகள் ஆரம்பிக்கும் போது விவசாயிகளின் பயிர்கள் பாரிய நோ ய் பீ டை தா க்கத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அ ஞ்சுகின்றனர்.

1946ம் ஆண்டின் 32ம் இலக்க நீர்ப்பாசன கட்டளை சட்டத்தின் கீழ் நடாத்தப்படும் காணிகள் உரிமையாளர்களான விவசாயிகள் மற்றும் பயிரிடும் உரிமையினை கொண்டிருப்பவர்களின் 2019/2020 ஆண்டிற்கான காலபோகத்தின் புழுதி கூட்டம் வவுனியா பிரதேச செயலகத்தில் கடந்த 05.10.2019 அன்று இடம்பெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக பிரகாரம் நெல் விதைப்புக்கான காலம் 10.10.2019 – 30.10.2019 வரை வழங்கப்பட்டதுடன் சேற்று வி தைப்பு தீர்மானமாக 09.11.2019 தொடக்கம் 23.11.2019 திகதி வரை விதைப்பு மேற்கொள்ள முடியும் எனவும் இ றுதியாக நீர் வழங்க வேண்டிய திகதியாக 28.02.2020 வரை தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இன்னும் 4நாட்கள் மாத்திரமே நீர் வழங்கப்படவுள்ள நிலையில் மிகுதி காலங்களில் அரச விதை உற்பத்தி பண்ணையின் வயல்களின் நிலமை கேள்விக்குறியாகியுள்ளது. காலம் தவறி விதைத்தால் ஒரு ஏக்கருக்கு 5000 ரூபா வீதம் அ றவிடப்படும் என குளக்கூட்டத்தின் தீர்மானமாகவுள்ளது.

விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கையில் அறிவுரைகள் கூற வேண்டிய விவசாய திணைக்களமே காலம் பிந்திய விதைப்பினை மேற்கொண்டு பாரிய அ ழிவினை சந்திக்கும் நிலையினை எதிர்நோக்கியுள்ளனர். அவர்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு வினைத்திறனான ஆலோசணைகளை வழங்குவார்கள் என வவுனியா மாவட்ட சமூக ஆர்வளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

15வருட கால அரச சேவையிலும் 8வருட கால குறித்த பண்ணையின் சேவையாற்றிய அனுபவமும் விவசாயமானி பட்டத்தினையும் தனதாக்கி கொண்டுள்ள பண்ணை முகாமையாளர் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கையில் குறித்த காலங்களில் மேற்கொள்ளாது தற்போது சந்தனக்கோரை வளர்ப்பிடமாக காட்சியளிக்கும் வரை மௌனம் காத்தது ஏன்?

வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இவ்விடயம் தொடர்பில் கவனத்தினை செலுத்தி வவுனியா மண்ணின் விவசாயத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பாரா?

You might also like