வவுனியா வரலாற்றில் வர்த்தக சங்கத்தினரின் பல வருடகால சேவையை கௌரவித்து நகர மத்தியில் காணி ஒதுக்கீடு..!!

வவுனியா வரலாற்றில் வர்த்தக சங்கத்தினரின் பல வருடகால சேவையை கௌரவித்து நகர மத்தியில் காணி ஒதுக்கீடு..!!

வவுனியாவில் கடந்த (1984- 2020) 36 வருடகாலமாக வர்த்தகர் சமூகம் சார்பாக இயங்கி வருவதுடன் பல்வேறு சமூக சேவை செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் வவுனியா வர்த்தக சங்கத்திற்கு நகர மத்தியில் ஒரு பரப்பு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குறித்த தீர்மானம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (25.02.2020) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் பல வருட காலமாக சிறப்பான முறையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற வர்த்தகர் சங்கம் , தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் , முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் போன்றவற்றின் செயற்பாடுகளை மேலும் சிறப்பான முறையில் முன்னேடுப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் கட்டிடம் அமைப்பதற்கு ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு பரப்பு காணி வீதம் மூன்று பரப்பு காணி வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் போது குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த அமைப்பினருக்கு காணி வழங்க வேண்டுமென தெரிவித்தார். அதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் தர்மபால செனவிரத்தின மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , செல்வம் அடைக்கலநாதன் , வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன ஆகியோர் கோரிக்கையினை ஏகமனுதாக ஏற்றுக்கொண்டு வவுனியா பிரதேச செயலாளருக்கு குறித்த அமைப்புக்களுக்கு காணி வழங்குமாறு பரிந்துரை செய்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இச் செயற்பாட்டினால் குறித்த அமைப்புக்களின் 3000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பயனடையவுள்ளனர்.


You might also like