வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் உடனடி இடமாற்றம் : நாளை புதிய பணிப்பாளர் பொறுப்பேற்பு

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் உடனடி இடமாற்றம் : நாளை புதிய பணிப்பாளர் பொறுப்பேற்பு

பேராதனை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபாணு அவர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம் மற்றும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை ஆகியவற்றின் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபாணு அவர்களை விவசாய பணிப்பாளர் நாயகம் , விவசாயத்திணைக்களம் , பேராதனை அவர்களினால் வழங்கப்பட்ட இடமாற்ற கட்டளைக்கு அமைய பதில் உத்தியோகத்தர் ஒருவரிடம் கடமை பொறுப்புக்களை கையளித்து விட்டு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளரை உடனடியாக பேராதனை விவசாயத்திணைக்களத்தில் கடமையினை பெறுபேற்குமாறு பேராதனை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய அ.சசீகலா பாணு அவர்கள் 2015ம் வருடம் பேராதனை விவசாயத் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு 2018ம் வருடம் நடுப்பகுதியில் மீண்டும் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக பொருப்பேற்று தற்போது நாளை (28.02.2020) முதல் மீண்டும் பேராதனை விவசாயத் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளைய தினம் (28.02.2020) SLAGS GRADE 01 தரத்தினை சேர்ந்த அருந்ததி வேல்சிவானந்தன் அவர்கள் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமைகளை பொருப்பேற்கவுள்ளார்.

You might also like