வவுனியாவில் புகையிரதம் மோதி யானை பலி : வயிற்றில் இருந்த குட்டியும் இறப்பு

வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலியாகியுள்ளது அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று (03.04.2017) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதமே பறயனாளங்குளம் பகுதியில் யானையுடன் மோதியுள்ளது.

இந் நிலையில் குறித்த யானையினை மீட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அதனை அங்கிருந்த அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like