கிளிநொச்சியில் கருங்கற்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் புரண்டு குடும்பஸ்தர் நசுங்கிப் பலி!

கருங்கற்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் உழவு இயந்திர பெட்டியில் பயணம் செய்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் கிளிநொச்சி கோணாவிலைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ரவிந்திரன் மரதை (வயது – 39) என்பவரே உயிரிழந்தவராவார்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலமானது மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

You might also like