யாழில் மீண்டும் சரமாரியான வாள்வெட்டு : இளைஞர்கள் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று இரவு மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயதிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த தெரியாத 4 பேர், வீதியோரத்தில் கதைத்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு நின்ற முச்சக்கரவண்டியையும் கடுமையாக சேதப்படுத்திவிட்டு ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தில், மட்டுவில் முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த பெரியநாயகம் பாலகுமார் என்ற வயது 22 வயதுடையவரும், சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ஜனார்த்தனன் என்ற வயது 24 வயதுடையவர்களே படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அயலவர்கள் உதவியுடன் படு காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இதன் போது, குறித்த நபர்களுக்கு கழுத்து மற்றும் கை பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டமையின் காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like