முல்லைத்தீவில் பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இந்த குழந்தையை பிரசவித்து, எரித்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கணவனை பிரிந்து வாழ்ந்துவரும் வாய் பேச முடியாத ஒரு பிள்ளையின் தாயார் ஒருவருக்கு நேற்று (02) நள்ளிரவு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து பிறந்த குழந்தையை குறித்த தாயார் வீட்டின் அருகில் உள்ள பற்றை காடு ஒன்றில் குப்பைகளுடன் சேர்த்து எரித்துள்ளார். இந்த சம்பவங்களை அவதானித்த குறித்த பெண்ணின்13 வயதான மகள் இன்றைய தினம் பாடசாலையில் நடந்த சம்பவங்களை ஆசிரியருக்கு விபரித்துள்ளார். இதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பாடசாலை நிர்வாகம் அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கமான 119 இற்;கு அழைத்து முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டதுடன் குழந்தையை பிரசவித்த தாயாரையும் கைது செய்தனர். அத்தோடு எரிந்த நிலையில் காணப்பட்ட சிசுவின் சடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் எம் எஸ் சம்சுதீன் சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார்.

You might also like