க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோல்வியின் காரணமாக மாணவி தற்கொலை – யாழில் நடந்த சோகம்

யாழ் பாடசாலை மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் அவர் தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, வேலணை கிழக்கு பகுதியை சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வேலணை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி அருட்பிரகாசம் ரேணுகா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இவருக்கு வயது 16.

எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால், குறித்த மாணவி கடும் மன வேதனையில் இருந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளியான பெறுபேறுகளுக்கு அமைய ஒரு ஏ சித்தி, ஒரு பீ சித்தி மற்றும் 6 சி மற்றும் ஒரு எஸ் சித்தியை பெற்றுள்ளார்.

You might also like