அநாதரவாக உயிரிழந்த முதியவர் – மனிதாபிமானமிக்க முச்சக்கர வண்டி சாரதிகளின் செயற்பாடு

யாருமற்ற நிலையில் உயிரிழந்த நபரின் சடலத்தை பொறுப்பேற்ற முச்சக்கர வண்டி சாரதிகள், அவருக்கு இறுதிக் கிரியைகள் செய்து அடக்கம் செய்துள்ளனர்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் உடலை, பொறுப்பேற்க யாரும் வரவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதி முச்சக்கரவண்டி சாதிகள், தமது தொழில் புரியும் இடத்திற்கு உடலை கொண்டுவந்து மத வழிப்பாடுகளை மேற்கொண்டதன் பின்னர் அடக்கம் செய்துள்ளனர்.

அனுராதபுர பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளின் பங்குபற்றலுடன், நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு அதிக காலம் அனுராதபுரத்தில் உள்ள பேரூந்து நிலையத்திற்கு அருகில் வெற்றிலை விற்பனை செய்த ஒருவரின் சடலமே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளது..

உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்தவர் அல்ல எனவும், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கலேவல பிரதேசத்தில் இருந்து வருகைத்தந்து, பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் சிறிய கடையொன்றில் வெற்றிலை விற்பனை செய்துள்ளார். அவர் கலே மாமா என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார்.

நோயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை ஏற்றுக் கொள்வதற்கு ஒருவரும் இல்லாத காரணத்தினால் அரசாங்கத்தின் செலவில் உடலை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் பேரூந்து நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி சாரதிகள், அருகில் உள்ள வர்த்தகரின் நிதி உதவியுடன் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் நாட்டிற்கே எடுத்துக்காட்டாகியுள்ளனர் என அங்கு மத வழிப்பாட்டினை மேற்கொண்ட தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like